மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
Published on

நாகர்கோவில் 

நாகர்கோவில் வல்லன்குமாரன்விளையை சேர்ந்தவர் முருகன் (வயது 70). சம்பவத்தன்று இவர் தனது உறவினருடன் மோட்டார் சைக்கிளில் வைத்தியநாதபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றோரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் முருகனுக்கு படுகாயம் ஏற்பட்டது. அவரை அருகில் நின்றவர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com