அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சீர்காழியில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

சீர்காழி:

சீர்காழி தென்பாதியிலுள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் எதிரே அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.. ஆர்ப்பாட்டத்துக்கு அங்கன்வாடி பணியாளர் சங்க சீர்காழி ஒன்றிய தலைவர் கிருஷ்ணவேணி தலைமை தாங்கினார். அங்கன்வாடி மையங்களுக்கு மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.. இதில் 100-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com