

சென்னை,
புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு 23-ந்தேதி(நாளை) தொடங்கி 1-ந்தேதி 10 நாட்கள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின் மூலம் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுக்கு நாளை 23.07.2026 முதல் 01.08.2026 ஆம் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சிக் கழக கடற்கரை விடுதியில் 10 நாட்கள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. அழைக்கப்பட்ட மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களை தவிர, வேறு எவரும் பயிற்சி முகாமில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.