கடலூர் மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கடலூர் மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
Published on

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 76 ஆயிரத்து 118 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 ஆயிரத்து 128 ஆக உயர்ந்தது. இதுவரை ஒற்றை இலக்க எண்ணில் இருந்த பாதிப்பு எண்ணிக்கை நேற்று இரட்டை இலக்க எண்ணுக்கு அதிகரித்து உள்ளது.

நேற்று முன்தினம் வரை 75 ஆயிரத்து 173 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று 2 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று வரை கொரோனா பாதித்த 51 பேர் கடலூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் வெளிமாவட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் 54 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com