தொழிற்சாலைகளுக்கு 10 சதவீத சொத்து வரி உயர்வு

தொழிற்சாலைகளுக்கு 10 சதவீத சொத்து வரி உயர்வு
தொழிற்சாலைகளுக்கு 10 சதவீத சொத்து வரி உயர்வு
Published on

வால்பாறை

வால்பாறை நகராட்சி மன்ற அவசர கூட்டம், தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமையிலும், துணைத்தலைவர் செந்தில்குமார், ஆணையாளர் சுரேஷ்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது.

கூட்டத்தில், வால்பாறை நகராட்சி பகுதியில் நகர் பகுதி மற்றும் எஸ்டேட் பகுதிகளை 3 மண்டலங்களாக பிரித்து, ஏ மண்டலத்திற்கு 20 பைசாவும், பி மண்டலத்திற்கு 30 பைசாவும், சி மண்டலத்திற்கு 40 பைசாவும் சொத்து வரி உயர்வு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலை, வணிக நிறுவனங்களுக்கும் 10 சதவீத சொத்து வரியை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. பின்னர் ஆணையாளர் சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து அவர், திருச்சி மாவட்டம் துறையூருக்கு பணி மாறுதலாகி சென்றார். கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் சார்பில் அவருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com