கொலை வழக்கில் பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை

கொலை வழக்கில் பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கொலை வழக்கில் பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்,

அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் அசன் அம்மாள் (வயது 48). இவருக்கும் சரோஜா (52) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 26.7.21 அன்று அசன் அம்மாள் கல்லால் சரோஜாவை தாக்கினார். இதில் சரோஜா படுகாயம் அடைந்து இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து பரளச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து அசன் அம்மாளை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்த வழக்கை நீதிபதி பகவதி அம்மாள் விசாரித்து பெண்ணை கொலை செய்த அசன் அம்மாளுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்தார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com