திருச்செந்தூர் கோவிலில் ஒரே நாளில் 100 ஜோடிகளுக்கு திருமணம்

கோவிலில் சுபமுகூர்த்த தினத்தில் திருமணங்கள் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.
திருச்செந்தூர் கோவிலில் ஒரே நாளில் 100 ஜோடிகளுக்கு திருமணம்
Published on: 

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று சுப முகூர்த்த தினத்தை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.

பக்தர்கள் குவிந்தனர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது. இக்கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல் திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் நூற்றுக்கணக்கான வாகனங்களிலும், ரெயில், பஸ்களில் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று திரளான பக்தர்கள் கோவில் வளாகத்தில் குவிந்தனர். இதனால் கோவில் வளாகத்தில் கூட்டம் அலைமோதியது.

அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி சுமார் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். இதனால் பொது தரிசன வரிசை, 100 ரூபாய் கட்டண தரிசன வரிசை செல்லக்கூடிய வரிசை என அனைத்து வழிகளும் பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் திறக்கப்பட்டது. அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.

திருமணம்

இக்கோவிலில் சுபமுகூர்த்த தினத்தில் திருமணங்கள் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. நேற்று சுபமுகூர்த்த தினம் என்பதால் ஏராளமான ஜோடிகளுடன் இருதரப்பு குடும் பத்தினர், உறவினர்கள், நண்பக்கள் கோவில் வளாகத்தில் குவிந்தனர். கோவில் வளாகம் மற்றும் சண்முக விலாசம் மண்டபம் போன்ற இடங்களில் 100-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com