ஓமலூர் அருகே 100 கிலோ வெள்ளி கடத்தப்பட்ட வழக்கு - மேலும் 2 பேர் கைது

வெள்ளி கடத்தல் வழக்கு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 2 நபர்களை போலீசார் கைது செய்தனர்.
ஓமலூர் அருகே 100 கிலோ வெள்ளி கடத்தப்பட்ட வழக்கு - மேலும் 2 பேர் கைது
Published on

சேலம்,

சேலம் ஓமலூர் அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து 100 கிலோ வெள்ளியை வியாபாரிகள் கொண்டு வந்து கொண்டிருந்தனர். அவர்களை பின்தொடர்ந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல், காரை மறித்து அதில் இருந்தவர்களை மிரட்டி கீழே இறக்கிவிட்டு 100 கிலோ வெள்ளியை காருடன் சேர்த்து கடத்திச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய ஓமலூர் போலீசார், கடத்தப்பட்ட காரையும், கேரளாவைச் சேர்ந்த 3 நபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இன்று இந்த வழக்கு தொடர்பாக மேலும் 2 நபர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 10 கிலோ வெள்ளிக் கட்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com