காசிவிஸ்வநாதர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

காசிவிஸ்வநாதர் கோவிலில் 108 சங்காபிஷேகம்
காசிவிஸ்வநாதர் கோவிலில் 108 சங்காபிஷேகம்
Published on

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் கிளியனூரில் காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தையொட்டி காசி விஸ்வநாதருக்கு 108 வலம்புரி சங்குகளால் சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, மூல மந்திர ஹோமம் மற்றும் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சங்காபிஷேகம் நடந்தது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com