10,11 மற்றும் 12-ம் வகுப்பு பாடத்திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் - தேர்வுத்துறை இயக்குனர் அறிவுறுத்தல்

10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் அடிப்படையில் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10,11 மற்றும் 12-ம் வகுப்பு பாடத்திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் - தேர்வுத்துறை இயக்குனர் அறிவுறுத்தல்
Published on

சென்னை,

கொரோனா ஊரடங்கு காரணமாக நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளை திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனிடையே ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டன. இருப்பினும் பொதுத் தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில், பாடங்களை முழுமையாக நடத்தி முடிக்க போதுமான கால அவகாசம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நடப்பாண்டிற்கான 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், நடத்தி முடிக்கப்படாத பாடப்பகுதிகளில் இருந்து கேள்விகள் இடம்பெறாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற்று முடிந்துள்ள 2 திருப்புதல் தேர்வுகளில் குறிப்பிட்ட பாடங்களில் இருந்து மட்டுமே கேள்விகள் இடம் பெற்றதால் பொதுத்தேர்வில் நடத்தி முடிக்கப்படாத பாடங்களிலிருந்து கேள்விகள் இடம் பெறுவது முறையாக இருக்காது என்று அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் அடிப்படையில் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்றும், பாடத்திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com