10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வாலிபரை போலீசார் கைது செய்தார்.
10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது
Published on

தேனி,

தேனி மாவட்டம் சின்னமனூர் புதுகிணறு தெருவை சேர்ந்தவர் மச்சப்பாண்டி (வயது 25). இவர், 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர், சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகார், போடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மச்சபாண்டியை கைது செய்தார். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com