அரசு கல்லூரி விடுதி வார்டன் வீட்டில் 11 பவுன் நகைகள், பணம் கொள்ளை

தஞ்சையில், அரசு கல்லூரி விடுதி வார்டன் வீட்டில் 11 பவுன் நகைகள், பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
அரசு கல்லூரி விடுதி வார்டன் வீட்டில் 11 பவுன் நகைகள், பணம் கொள்ளை
Published on

கல்லூரி விடுதி வார்டன்

தஞ்சை பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 53). இவர், தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரி விடுதியில் வார்டனாக பணியாற்றி வருகிறார்.சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரான ஒரத்தநாடு அருகே தொண்டராம்பட்டு கிராமத்திற்கு சென்றார்.

11 பவுன் நகைகள், பணம் கொள்ளை

பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தொடர்ந்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைத்து இருந்த ஆரம், நெக்லஸ், மோதிரங்கள் உள்பட 11 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள், ரூ.5ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை.

போலீசில் புகார்

வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து நகை, பணம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச்சென்றது தெரிய வந்தது.இதுகுறித்து தஞ்சை தெற்கு போலீசில் ஆறுமுகம் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com