ஊரப்பாக்கம் அருகே சாலையை கடந்த 12 அடி நீள ராஜநாகம்: வாகன ஓட்டிகள் அச்சம்

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து நல்லம்பாக்கம் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி இருபுறமும் தொடர்ச்சியாக அடர்ந்த வனப்பகுதி உள்ளது.
சாலையைக் கடந்த ராஜநாகம்
Published on

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் அருகே சாலையை கடந்த 12 அடி நீள ராஜநாகம் படம் எடுத்து ஆடியதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து நல்லம்பாக்கம் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி இருபுறமும் தொடர்ச்சியாக அடர்ந்த வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் ஏராளமான மான்கள் உள்ளிட்ட பல்வேறு சிறிய வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

படம் எடுத்து ஆடிய ராஜநாகம்

நேற்று காலை நல்லம்பாக்கத்தில் இருந்து ஊனைமாஞ்சேரி கிரஷர் பகுதிக்குச் செல்லும் சாலையை ஒட்டியுள்ள காப்புக்காட்டில் இருந்து சுமார் 12 அடி நீளமுள்ள ராஜநாகம் ஒன்று சாலையை கடக்க வந்தது. அப்போது ராஜநாகம் திடீரென படம் எடுத்து ஆடியதால் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

புகைப்படம் எடுத்த வாகன ஓட்டிகள்

உடனே வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை சாலையோரம் நிறுத்திவிட்டு, ராஜநாகத்தை செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். சில நிமிடங்கள் படம் எடுத்து ஆடிய ராஜநாகம் பின்னர் சாலையை கடந்து மீண்டும் காப்புக்காட்டுக்குள் சென்றுவிட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com