தமிழகத்தின் 12 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவு

தமிழகத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தின் 12 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவு
Published on

சென்னை,

தமிழகத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே வரமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக சாலை ஓரத்தில் உள்ள கடைகளில் பழச்சாறுகள், தர்பூசணி, பழ வகைகள், கரும்பு சாறு, இளநீர் போன்றவற்றை பருகி இளப்பாறி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தின் 12 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக ஈரோடு மற்றும் கரூர் பரமத்தியில் 107 டிகிரி வெயில் சுட்டெரித்தது. தமிழகத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவான இடங்கள்;

* கரூர் பரமத்தி - 107 டிகிரி பாரன்ஹீட்

* ஈரோடு - 107 டிகிரி பாரன்ஹீட்

* நாமக்கல் - 103 டிகிரி பாரன்ஹீட்

* மதுரை விமான நிலையம் - 103 டிகிரி பாரன்ஹீட்

* திருச்சி - 103 டிகிரி பாரன்ஹீட்

* சேலம் - 102 டிகிரி பாரன்ஹீட்

* மதுரை நகரம் - 101 டிகிரி பாரன்ஹீட்

* கோவை - 101 டிகிரி பாரன்ஹீட்

* பாளையங்கோட்டை - 101 டிகிரி பாரன்ஹீட்

* திருப்பத்தூர் - 101 டிகிரி பாரன்ஹீட்

* திருத்தணி - 100 டிகிரி பாரன்ஹீட்

* வேலூர் - 100 டிகிரி பாரன்ஹீட்

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com