சட்டவிரோதமாக இயங்கும் 134 இறால் பண்ணைகளை மூட வேண்டும் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

சட்ட விரோதமாக இறால் பண்ணை நடத்தியவர்களுக்கு எதிராக 6 வாரங்களில் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

தமிழகத்தில் அனுமதியின்றி, சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் 134 இறால் பண்ணைகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த இறால் பண்ணைகளை மூடும்படி, மீன்வளத்துறை உதவி இயக்குனர் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக இறால் பண்ணை உரிமையாளர்கள் தாக்கல் செய்த வழக்குகளை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

அதேபோல சட்ட விரோதமாக இறால் பண்ணை நடத்தியவர்களுக்கு எதிராக 6 வாரங்களில் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, இந்த காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்கத் தவறிய அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.  

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com