தமிழக மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையால் கைது... தலா ரூ.4.50 லட்சம் அபராதம்

கடந்த 6ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு தலா ரூ. 4.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையால் கைது... தலா ரூ.4.50 லட்சம் அபராதம்
Published on

தமிழகம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.

இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ராமேசுவரம் அடுத்து பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர்கள் சிலர் கடந்த 6ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 14 மீனவர்களை கைது செய்தனர். மேலும் அவர்கள் வந்த படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து இலங்கை நீதிமன்றம் இன்று 14 மீனவர்களுக்கு தலா ரூ. 4.50 லட்சம் பணத்தை அபராதமாக விதித்துள்ளது. இந்த அபராதத்தை கட்டினால் விடுதலை, தவறினால் ஓராண்டுக்கு சிறை தண்டனை என நீதிபதி உத்தரவு பிரப்பித்தார். இந்த சம்பவத்தால் பாம்பன் மீனவர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com