தூத்துக்குடி மாநகரில் ஒரே மாதத்தில் 1,405 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் கடந்த செப்டம்பர் மாதத்தில் 331 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டன.
தூத்துக்குடி மாநகரில் ஒரே மாதத்தில் 1,405 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி
Published on: 

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகராட்சியில் ஒரே மாதத்தில் மொத்தம் 1,405 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதோடு, 331 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

வெறிநோய் தடுப்பூசி

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் விலங்குகள் கருத்தடை திட்டம் (ABC) மற்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்துதல் (ARV) தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் கடந்த செப்டம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட தெருநாய்கள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி ஒரே மாதத்தில் மொத்தம் 1,405 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி (Anti-Rabies Vaccine) செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 331 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை (Animal Birth Control) செய்யப்பட்டு, தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டன. அறுவை சிகிச்சைக்குப் பின் சில நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, அவை பாதுகாப்பாக மீண்டு வந்தவுடன் மீண்டும் பிடிபட்ட அதே இடங்களிலேயே கொண்டு போய் விடப்பட்டுள்ளன.

தெருநாய்கள் தொல்லை- புகார்களுக்கான டோல்ப்ரீ எண்

தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தினமும் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் (NGO) கூட்டு உதவியுடன் இக்கட்டுப்பாட்டுப் பணிகள் திறம்பட மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அல்லது ஆக்ரோஷமான நாய்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க விரும்பினால், 1800 203 0401 என்ற கட்டணமில்லா தொலைபேசி (Toll-Free) எண்ணைத் தொடர்பு கொண்டு மாநகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com