மூதறிஞர் ராஜாஜியின் 145-வது பிறந்தநாள் - தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை

ராஜாஜியின் உருவப்படத்திற்கு அமைச்சர் சேகர் பாபு, அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
மூதறிஞர் ராஜாஜியின் 145-வது பிறந்தநாள் - தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை
Published on

சென்னை,

மூதறிஞர் ராஜாஜியின் 145-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் ராஜாஜியின் உருவசிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை பாரிமுனையில், ஐகோர்ட்டு வளாகம் அருகே அமைந்துள்ள ராஜாஜியின் உருவசிலைக்கு கீழ் அவரது புகைப்படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து ராஜாஜியின் உருவப்படத்திற்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் சேகர் பாபு, அமைச்சர் சாமிநாதன் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com