என்ஜினீயர் வீட்டில் 15 பவுன் நகை திருட்டு

குன்றத்தூர் அருகே என்ஜினீயர் வீட்டில் 15 பவுன் நகை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
என்ஜினீயர் வீட்டில் 15 பவுன் நகை திருட்டு
Published on

குன்றத்தூர் அடுத்த மணஞ்சேரி, ராஜகணபதி நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 35). இவருடைய மனைவி நிவேதா (30). இருவரும் சாப்ட்வேர் என்ஜினீயர்கள் ஆவர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சன்று விட்டனர். நேற்று மாலை வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 15 பவுன் நகைகளை திருடிச்சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி குன்றத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com