கடந்த 2 நாட்களில் சென்னையில் இருந்து அரசு பஸ்களில் 1.66 லட்சம் பேர் பயணம்

சென்னையில் இருந்து 3 ஆயிரத்து 28 அரசு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன
கடந்த 2 நாட்களில் சென்னையில் இருந்து அரசு பஸ்களில் 1.66 லட்சம் பேர் பயணம்
Published on

சுபமுகூர்த்த தினம், பக்ரீத் பண்டிகை, வாரவிடுமுறை ஆகிய காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை முதல் சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதன் காரணமாக அரசு, தனியார் பஸ்கள், ரெயில்களில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு அரசு பஸ்களில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 540 பேர் பயணித்துள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. கடந்த 2 நாட்களில் சென்னையில் இருந்து 3 ஆயிரத்து 28 அரசு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com