தமிழ்நாட்டில் 2 நாட்களில் 17 கொலை; சட்டம் - ஒழுங்கு குறித்து முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை

சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர், டிஜிபி ஆகியோருடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.
சட்டம் - ஒழுங்கு குறித்து முதல்-அமைச்சர் விஜய் அவசர ஆலோசனை
Published on: 

சென்னை,

தமிழகத்தில் 2 நாட்களில் 17 பேர் கொலை செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தீபாவளி திருநாளில் அசுரர்களின் ஆட்சியை நினைவுபடுத்துகிறதா தவெக அரசு என அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இந்தநிலையில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். முதல்-அமைச்சருடனான ஆலோசனையில் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தீபாவளி பண்டிகை நாளில் மட்டும் 11 கொலைகள் நடந்துள்ளதை குறிப்பிட்டு எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் வைத்துள்ள நிலையில் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

X