திருக்கோவிலுர் உலகளந்த பெருமாள் கோவிலில் 17- ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

கோவிலின் ராஜகோபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சீரமைப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
திருக்கோவிலுர் உலகளந்த பெருமாள் கோவிலில் 17- ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு
Published on

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ உலகளந்த பெருமாள் திருக்கோவிலில், சுமார் 16 - 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் வருகிற 5-ந் தேதி நடைபெறவுள்ள மகா குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, கோவிலின் ராஜகோபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சீரமைப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கல்வெட்டு

இந்தப் பணிகளின் போது மேற்கு ராஜகோபுர நுழைவுவாயிலின் வலதுபுறச் சுவரில் மறைந்திருந்த கல்வெட்டு வரலாற்று ஆய்வாளர்களின் கவனத்திற்கு வந்தது. "ஸ்ரீமதே ராமானுஜாய நம" என்ற வைணவ வாழ்த்துடன் தொடங்கும் இக்கல்வெட்டு, சர்வதாரி வருடம் பங்குனி மாதம் 10-ந் தேதி திருக்கோவிலூர் ஆழ்வார்கள் திருக்கோயில் கருவூலத்திற்கு அளிக்கப்பட்ட காணிக்கைகள் மற்றும் நிர்வாக விவரங்களை விவரிக்கிறது. தொல்லியல் துறை உதவி இயக்குநர் பொ.கோ. லோகநாதன் தலைமையில், கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் சிங்கார உதியன் மற்றும் விழுப்புரம் வீரராகவன் உள்ளிட்டோர் அதனைப் படியெடுத்துப் படித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com