திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.19.20 கோடியில் 11 புதிய திட்ட பணிகள் - முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.19.20 கோடியில் 11 புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.19.20 கோடியில் 11 புதிய திட்ட பணிகள் - முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
Published on

திருவண்ணாமலை,

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய 12 மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிகாரிகளுடன் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார்.

அந்த வகையில், இதுவரை 19 மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்று கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தி, உரிய உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார். இந்த நிலையில், 20-வது மாவட்டமாக இன்று (புதன்கிழமை) காலை திருவண்ணாமலை மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்து சேர்ந்தார்.

முதற்கட்டமாக திருவண்ணாமலையில் ரூ.52.59 கோடியில் 31 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து 16 துறைகள் சார்பில் 18,279 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

இதனையடுத்து அங்குள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். தொடர்ந்து, மகளிர் சுயஉதவிக் குழுக்கள், தொழில் முனைவோர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com