காரில் 243 கிலோ புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது: ரூ.2.75 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூர் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த சந்தேகத்திற்கு இடமான கார் ஒன்றை மறித்துச் சோதனை செய்தனர்.
காரில் 243 கிலோ புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது.
Published on: 

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் காரில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை கடத்தி வந்த 2 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 243 கிலோ புகையிலை பொருட்கள் ஒரு கார் மற்றும் ரூ.2.75 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

புகையிலை பொருட்கள் கடத்தல்

தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சந்தேகத்திற்கு இடமான கார் ஒன்றை மறித்துச் சோதனை செய்தனர். அந்த சோதனையில், காரில் சட்ட விரோத விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

2 பேர் கைது

அதைத் தொடர்ந்து, கடத்தலில் ஈடுபட்ட திருநெல்வேலி சீவலப்பேரி பகுதியைச் சேர்ந்த வேலுசாமி மகன் கருப்பசாமி (வயது 42) மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இன்ஸன் அலி மகன் அம்மர்(23) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

243 கிலோ புகையிலை பொருட்கள், கார், பணம் பறிமுதல்

அவர்களிடமிருந்து 243 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் மற்றும் ரொக்கப்பணம் ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்து 800 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 2 பேர் மீதும் புகையிலைப் பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுச் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

X