நெல்லையில் கொலை முயற்சி வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லையில் தச்சநல்லூர், பாளையங்கோட்டை பகுதிகளில் 2 வாலிபர்கள் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
நெல்லையில் கொலை முயற்சி வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் திருநெல்வேலி தச்சநல்லூர், தேனீர்குளம் தெற்கு நியூ காலனியை சேர்ந்த சீனிவாசன் மகன் நம்பிராஜன் (வயது 32) என்பவர் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் காரணமாக அவர் திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (மேற்கு) பிரசண்ணகுமார், போலீஸ் உதவி கமிஷனர் (ஜங்ஷன் சரகம்) தர்ஷிகா நடராஜன், தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் ஆகியோரின் பரிந்துரையின்பேரில் திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்ஹாதிமணி உத்தரவுப்படி இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.

இதேபோல் திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை பகுதியில் கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளவிக்கும் செயல்களில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, திம்மராஜபுரம், வெங்கடேஸ்வரா தெருவை சேர்ந்த ராமர் மகன் ஆதிநாராயணன்(23) என்பவர் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் காரணமாக அவர் திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (கிழக்கு) வினோத் சாந்தாராம், போலீஸ் உதவி கமிஷனர் (பாளையங்கோட்டை சரகம்) சுரேஷ், பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டியன் ஆகியோரின் பரிந்துரையின்பேரில், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்ஹாதிமணி உத்தரவுப்படி இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com