கோவில்பட்டியில் பைக்கில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 2 பேர் கைது

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் போலீசார் கோவில்பட்டி-எட்டயபுரம் சாலையில் உள்ள தனியார் திரையரங்கம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் போலீசார் கோவில்பட்டி- எட்டயபுரம் சாலையில் உள்ள தனியார் திரையரங்கம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு பைக்கில் வந்த 2 வாலிபர்கள், போலீசாரை கண்டவுடன் திருப்ப செல்ல முயன்றுள்ளனர்.
போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பைக்கில் சோதனையிட்டபோது, அதில் வெள்ளை நிற சாக்கில் வாள் ஒன்று இருப்பதும், ஒருவரின் முதுகின் பின்னால் அரிவாள் மறைத்து வைத்திருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கங்கைகொண்டான் வெங்கடாசலபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் உலகராஜ்(எ) உலகு (வயது 26), கோவில்பட்டி கடலையூர் சாலை சண்முகநகரை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் மாரிகிருஷ்ணன்(21) ஆகிய 2 பேரையும் கைது செய்து, ஆயுதங்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.






