செல்போன் திருடிய 2 பேர் கைது

ஆழியாறு அருகே செல்போன் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
செல்போன் திருடிய 2 பேர் கைது
Published on

ஆழியாறு

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு எல்.எப்.காலனியை சேர்ந்தவர் அசோக் (வயது 40). இவர் ஆழியாறில் இருந்து கோட்டூர் செல்லும் ரோட்டில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, சிறுநீர் கழித்து கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது மோட்டார் சைக்கிள் மேல் இருந்த செல்போனை அந்த வழியாக வந்த 2 பேர் திருடி சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆழியாறு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த விக்னேஷ், முகமது நிசாத் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com