சென்னை பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் 2 பேர் கைது

சென்னை பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் 2 பேர் கைது
Published on

சென்னை,

சென்னை பெரம்பூரில் உள்ள ஒரு நகைக் கடையில், கடந்த மாதம் 10 ஆம் தேதி 9 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. கொள்ளையர்கள் கடையில் ஷட்டர் மற்றும் நகை பெட்டகத்தை வெல்டிங் மிஷின் மூலம் வெட்டி எடுத்து தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

மேலும், சிசிடிவி கேமராவில் உள்ள ஹார்ட் டிஸ்கையும் எடுத்துச் சென்றனர். இதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில், 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், நகைக்கடையில் கொள்ளை அடித்தததாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வைத்து கஜேந்திரன், திவாகர் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com