வெவ்வேறு சம்பவத்தில் 2 பேர் சாவு

வெவ்வேறு சம்பவத்தில் 2 பேர் பலியானார்கள்.
வெவ்வேறு சம்பவத்தில் 2 பேர் சாவு
Published on

வாலிபர் பலி

திருமயத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 25). இவர் நேற்று திருமயத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். புதுக்கோட்டை டி.வி.எஸ். கார்னர் அருகே வந்த போது மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதாக கூறப்படுகிறது.

இதில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் விரைந்து வந்து பலியானவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விஷம் தின்றவர் சாவு

புதுக்கோட்டையை சேர்ந்தவர் ஆனந்தன் (57). குடிபோதைக்கு அடிமையான இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று விஷத்தை தின்ற ஆனந்தன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததில் இறந்தார். இது குறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com