மின் மோட்டார் திருடியதாக சிறுவன் உள்பட 2 பேர் கைது

மின் மோட்டார் திருடியதாக சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மின் மோட்டார் திருடியதாக சிறுவன் உள்பட 2 பேர் கைது
Published on

திருச்சி, கே.கே. நகர், அய்யப்பன் நகர், வீனஸ் தெருவை சேர்ந்தவர் வினோத்குமார்(வயது 38). இவர் அப்பகுதியில் புது வீடு ஒன்றை கட்டி வருகிறார். அந்த கட்டிடத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மின்மோட்டார் ஒன்றை பொருத்தியுள்ளார். இந்த நிலையில் அந்த மின் மோட்டாரை காணவில்லை என்று கே.கே.நகர் போலீசில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்மோட்டார் திருடியதாக எடமலைப்பட்டிபுதூர், அன்பிலார் தெருவை சேர்ந்த வீராச்சாமியின் மகன் சரோன்(19) மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com