டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறித்தவர் உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறித்தவர் உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறித்தவர் உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Published on

திருச்சி பொன்மலை தங்கேஸ்வர் நகரில் உள்ள டாஸ்மாக் கடை ஊழியரிடம் கத்தியை காட்டி மதுபாட்டில்கள் மற்றும் பணம் கேட்டு மிரட்டி பறித்த சோனி என்கிற பரத்குமாரை (வயது 25) பொன்மலை போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணையில் சோனி என்கிற பரத்குமார் மீது 8 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதேபோல் தில்லைநகர் சாஸ்திரி ரோட்டில் கடையின் பூட்டை உடைத்து ரூ.90 ஆயிரம் மற்றும் 16 கிராம் தங்க காசுகளை திருடிய திருச்சி பீம நகரை சேர்ந்த கிறிஸ்டோன் என்கிற மூனு (20) என்பவரை தில்லைநகர் போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணையில் கிறிஸ்டோன் மீது 5 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

எனவே இவர்களது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு பொன்மலை மற்றும் தில்லைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருக்கும் சோனி என்கிற பரத்குமார் மற்றும் கிறிஸ்டோன் என்கிற மூனு ஆகியோருக்கு குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான நகல் வழங்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com