நீலாங்கரை கடற்கரையில் தோழியுடன் வந்த வாலிபரிடம் பணபரிமாற்ற செயலி மூலம் பணம் பறித்த 2 பேர் கைது

நீலாங்கரை கடற்கரையில் தோழியுடன் வந்த வாலிபரிடம் பணபரிமாற்ற செயலி மூலம் பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நீலாங்கரை கடற்கரையில் தோழியுடன் வந்த வாலிபரிடம் பணபரிமாற்ற செயலி மூலம் பணம் பறித்த 2 பேர் கைது
Published on

சென்னை சைதாப்பேட்டை ஜெயராம் தெருவைச் சேர்ந்தவர் முகம்மது உசேன் (வயது 25). இவர், ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

இவர், நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் கிழக்கு கடற்கரையில் கடந்த 11-ந் தேதி இரவு தனது தோழியுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 மர்மநபர்கள் இருவரிடமும் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். தன்னிடம் பணம் இல்லை என கூறியதால் முகம்மது உசேனை தாக்கிய மர்மநபர்கள், அவர் வைத்திருந்த பணப்பையை பறித்து அதில் இருந்த 600 ரூபாயை எடுத்தனர்.

மேலும் அவரது செல்போனை பறித்து அதில் பணபரிமாற்ற செயலி மூலம் தங்களது வங்கி கணக்கு ரூ.40 ஆயிரத்தை அனுப்பி வழிப்பறி செய்துவிட்டு தப்பி ஓடினர். இது குறித்து நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் வாலிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக பழைய குற்றவாளிகளான பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த உதயகுமார் (21), விக்னேஷ் (22) ஆகியோரை கைது செய்தனர். மேலும் தினேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com