மது விற்ற 2 பேர் கைது

நாகர்கோவிலில் மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மது விற்ற 2 பேர் கைது
Published on

நாகாகோவில், 

நாகர்கோவில் வடசேரி போலீசார் நேற்று வடசேரி பஸ் நிலையம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்ற ஒருவரை பிடித்து விசாரித்த போது, அவர் பேச்சாங்குளம் பகுதியை சேர்ந்த துரைசாமி (வயது 62) என்பதும், மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல பட்டகசாலியன்விளை பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட ஈத்தாமொழியை சேர்ந்த பிரவீன் ராஜன் (28) என்பவரை நேசமணி நகர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com