மறைமலைநகர் அருகே புகையிலை பொருட்களை விற்ற 2 பேர் கைது

மறைமலைநகர் அருகே புகையிலை பொருட்களை விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மறைமலைநகர் அருகே புகையிலை பொருட்களை விற்ற 2 பேர் கைது
Published on

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள கீழக்கரணை பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் பார்த்தபோது, அங்குள்ள ஒரு கடையில் திருட்டுத்தனமாக தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்து கொண்டிருந்த திருப்பதி (வயது 50) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 26 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதேபோல சிங்கப்பெருமாள் கோவில் அனுமந்தபுரம் ரோடு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த செல்வம் (60), என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com