சாராயம் கடத்தி வந்த 2 பேர் கைது

நாகூர் அருகே சாராயம் கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாராயம் கடத்தி வந்த 2 பேர் கைது
Published on

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் உத்தரவின் பேரிலும் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் அறிவுறுத்தல்படியும் சாராய கடத்தலை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். நாகூர் வெட்டாற்று பாலம் அருகில் தனிப்படை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிள்களில் 2 பேர் வேகமாக சென்றனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஐவநல்லூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சந்திரன் மகன் கார்த்திகேயன் (வயது 21), செல்லூரை சேர்ந்த ஹனிபா முகமது அசாருதீன் (22) ஆகியோர் என்பதும், மோட்டார்சைக்கிள்களில் சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைதுசெய்து அவர்களிடம் இருந்து 220 லிட்டர் சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார்சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com