கைதி தப்பி ஓடிய விவகாரத்தில் 2 போலீசார் பணியிடை நீக்கம்

சிவகங்கையில் கைதி ஒருவரை போலீசார் 2 பேர், மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றபோது திடீரென அந்த கைதி தப்பி ஓடிவிட்டார்.
கைதி தப்பி ஓடிய விவகாரத்தில் 2 போலீசார் பணியிடை நீக்கம்
Published on

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்தவர் புலிப்பாண்டி (25). இவர் 2022-ம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் இருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு புலிப்பாண்டி ஆஜராகவில்லை. எனவே அவருக்கு கோர்ட்டில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் புலிப்பாண்டியை கைது செய்தனர்.

பின்னர் அவரை போலீஸ்காரர்கள் ராஜேஷ்கண்ணா, சண்முகவேலு ஆகியோர் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். அப்போது புலிப்பாண்டி திடீரென தப்பி ஓடிவிட்டார். இந்த விவகாரத்தில் ராஜேஷ்கண்ணா, சண்முகவேலு ஆகியோர் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com