தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் திரிந்த 2 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்


தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் திரிந்த 2 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்
x

மட்டக்கடை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து சோதனை செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் இரவு ரோந்து பணி மேற்கொண்டு மட்டக்கடை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மட்டக்கடை பகுதியை சேர்ந்த மாரிச்செல்வம் (வயது 21), ராசையா(எ) கலாம்(23) ஆகியோரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் ஆயுதங்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், ஆயுதங்கள் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

1 More update

Next Story