ஒரு கிலோ கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது

ஒரு கிலோ கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஒரு கிலோ கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது
Published on

திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்க மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவு துணை போலீஸ்சூப்பிரண்டு முத்தரசு தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம் இரவு மணிகண்டம் அருகே ஆலம்பட்டி சாலையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, மணிகண்டம் அருகே உள்ள நாகமங்கலம் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெல்கிஸ்ராஜ். இவரது மகன் தினேஷ்குமார் (வயது 29), விருதுநகர் கல் பள்ளிவாசல் அருகே உள்ள பர்மா காலனியை சேர்ந்த அமானுல்லா மகன் அப்துல் பாஷாத் (22)ஆகியோர் மோட்டார் சைக்கிளில் விற்பனைக்காக ஒரு கிலோ கஞ்சாவை எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், கஞ்சா, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரும் திருச்சி ஜே.எம். 4 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com