வேலூர்: சாலையோர பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளான பஸ் - 20 பயணிகள் படுகாயம்

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்: சாலையோர பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளான பஸ் - 20 பயணிகள் படுகாயம்
Published on

வேலூர்,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை அரசு பஸ் வந்துகொண்டிருந்தது. இந்த பஸ்சில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.

இந்நிலையில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

20 பேர் படுகாயம்

இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 20 பயணிகள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com