என்ஜினீயர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு

என்ஜினீயர் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் தங்க நகை திருடப்பட்டது.
என்ஜினீயர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு
Published on

மாங்காடு அடுத்த கோவூர், மதுரா அவென்யூ பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (30), ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கார் தொழிற்சாலையில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர் வேலை முடிந்து தனது சொந்த ஊரான தேனிக்கு சென்று விட்டார்.

இவரது வீட்டின் அருகில் வசிப்பவர் நேற்று காலை பார்த்தபோது தினேஷ் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து தினேசுக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து தினேஷின் நண்பர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு 20 பவுன் நகைகள், ஒரு லேப்டாப், கேமரா ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து மாங்காடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் மாங்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கொள்ளை சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com