வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
Published on

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஆலயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 24). இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, சிறுமியின் பெற்றோர் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி கருணாநிதி வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் அமுதா ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கின் விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட கார்த்திகேயனுக்கு 20 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com