வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கில், வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
Published on

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள குண்டாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 24). இவர், கடந்த ஆண்டு 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று, பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தரப்பில் எரியோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் எரியோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தகுமாரை கைது செய்தனர். மேலும் சிறுமியை போலீசார் மீட்டனர். இந்த வழக்கின் விசாரணை திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி சரண் வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜோதி ஆஜராகி வாதாடினார்.

இந்த வழக்கின் விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நீதிபதி சரண் நேற்று தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட ஆனந்தகுமாருக்கு, சிறுமியை பலாத்காரம் செய்ததற்காக போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் சிறுமியை கடத்தி சென்றதற்காக 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தார். சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com