தூத்துக்குடியில் 2.1 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்: 2 பேர் கைது

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் தலைமையிலான போலீசார் தூத்துக்குடி அமெரிக்கன் மருத்துவமனை சந்திப்பு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் 2.1 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்: 2 பேர் கைது
Published on

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மகராஜன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் தூத்துக்குடி அமெரிக்கன் மருத்துவமனை சந்திப்பு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படி வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில், அவர்கள் தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெபஸ்டின் (வயது 25), ஜெய்ஆனந்த்(21) ஆகியோர் என்பதும், அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்சொன்ன 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 2 கிலோ 155 கிராம் கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com