தமிழ்நாட்டில் இன்று 21 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தற்போது 123 ஆக அதிகரித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் இன்று 378 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்தவகையில், சென்னை மாவட்டத்தில்14 பேருக்கும், சேலம் மாவட்டத்தில் 2 பேருக்கும், செங்கல்பட்டு, பெரம்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர்ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் என 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 15 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல, இன்று தமிழ்நாட்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com