

திருவண்ணாமலை,
கிருஷ்ணகிரி அணையில் இருந்து விநாடிக்கு 2220 கன அடி உபரிநீர், தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேஆர்பி அணை என்பது தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள துடுகனஹள்ளி கிராமத்திற்கு அருகில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஒரு அணையாகும். இந்த அணை கிருஷ்ணகிரியிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் , தர்மபுரிக்கும் கிருஷ்ணகிரிக்கும் இடையில் அமைந்துள்ளது. இது கிருஷ்ணகிரியைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் வழங்குகிறது. இந்த அணை 1957 கட்டப்பட்டு, அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் கே. காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது .
தமிழகத்தில் சூப்பர் எல்நினோ தாக்கத்தல் அணைகள் வரண்டு, போதிய நீர் இன்றி விவசாயிகள் பெரிதும் கவலையடைந்தனர். இந்த சூழலில் தற்போது வடகிழக்கு பருமழை தொடங்கி தமிழகத்தில், சென்னை, கோவை, நீலகிரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருவாரூர், திருவள்ளூர், உள்ளிட்ட பல்வேறு மாட்டங்களில் பெய்து வருகிறது. அதுபோல கேரளா மற்றும் கர்நாடக ஆகிய மாநிலங்களின் எல்லைகளில் மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தின் அணைகள் வேகமாக நிறைந்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது. இதனால் வைகை அணை, மேட்டூர் அணை உள்ளிட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி அணையில் இருந்து விநாடிக்கு 2220 கன அடி உபரிநீர், தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், செய்யாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்பெண்ணையாறு மற்றும் செய்யாறு ஆகிய பகுதிகளிலுள்ள கரையோரம் வசிக்கும் மக்களுக்கு திருவண்ணாமலை ஆட்சித்தலைவர் அவர்கள் எச்சரிக்கை செய்தி.
கிருஷ்ணகிரி மாவட்டம். கிருஷ்ணகிரி அணையிலிருந்து வினாடிக்கு 2220 கன அடி உபரிநீர் தென்பெண்ணையாற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. உபரி நீரானது செங்கம் வட்டம் நீப்பத்துறை கிராமத்தை கடந்து சாத்தனூர் அணைக்கு செல்வதால் பொதுமக்கள் யாரும் கடக்கவோ, குளிக்கவோ கூடாது 6760T தென்பெண்ணையாற்றில் இறங்கவோ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
ஜவ்வாது மலை மற்றும் அதனை ஒட்டியுள்ள செய்யாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே செய்யாற்றின் கரையோரம் வசிக்கும் கிராம மக்கள் யாரும் செய்யாற்றில் இறங்கவோ.கடக்கவோ. குளிக்கவோ கூடாது என திருவண்ணாமலை ஆட்சித்தலைவர் திருமதி வந்தனா கார்க்.இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.