2,222 காலி பணியிடங்கள்: ஜனவரி 7-ம் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டித்தேர்வு

தமிழகத்தில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப ஜனவரி 7-ம் தேதி போட்டித்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2,222 காலி பணியிடங்கள்: ஜனவரி 7-ம் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டித்தேர்வு
Published on

சென்னை,

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:

தமிழகத்தில் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு வருகிற ஜனவரி மாதம் 7-ந்தேதி நடக்கிறது.

இந்த தேர்வில் பங்கேற்க வருகிற நவம்பர் 1-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 30-ந்தேதி ஆகும். தமிழுக்கு 371 காலி பணியிடங்களும், ஆங்கிலத்துக்கு 214 பணியிடங்களும், கணிதத்துக்கு 200 பணியிடங்களும், இயற்பியலுக்கு 274 பணியிடங்களும், வேதியியலுக்கு 273 பணியிடங்களும், வரலாறுக்கு 346 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பு மற்றும் பி.எட். முடித்திருக்க வேண்டும். டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com