தூத்துக்குடியில் 272 விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

கலசல் மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 272 விசைப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் 272 விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
Published on

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 272 விசைப் படகுகளில் சுழற்சி முறையில் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக மீன்பாடு அதிகமாக இல்லாததால் நஷ்டம் ஏற்பட்டு வருவதாக விசைப்படகு உரிமையாளர்கள் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் விசைப் படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கலசல் மீன்களுக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால் மீன்பிடி தொழிலுக்கு செல்லவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் 272 விசைப் படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com