மாவட்டத்தில் புதிதாக 28 பேருக்கு கொரோனா

மாவட்டத்தில் புதிதாக 28 பேருக்கு காரோனா பாதிப்பு ஏற்பட்டது.
மாவட்டத்தில் புதிதாக 28 பேருக்கு கொரோனா
Published on

மாவட்டத்தில் புதிதாக 28 பேருக்கு காரோனா பாதிப்பு ஏற்பட்டது.சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்தநிலையில், நேற்று புதிதாக 28 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. சேலம் மாநகராட்சி பகுதியில் 12 பேர், தாரமங்கலத்தில் 3 பேர், மேச்சேரி, வீரபாண்டி, ஆத்தூர், அயோத்தியாப்பட்டணம் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், நங்கவள்ளி, ஓமலூர், பனமரத்துப்பட்டி, தலைவாசல் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும், கோவையில் இருந்து சேலத்துக்கு வந்த ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு 131 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் 13 பேர் குணமடைந்துவிட்டதால் நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com