2,900 கண் திருஷ்டி யந்திரங்கள்; 42 அடி உயரம் - கவனம் பெற்ற கொளத்தூர் விநாயகர் சிலை

தமிழ்நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
2,900 கண் திருஷ்டி யந்திரங்கள்; 42 அடி உயரம் - கவனம் பெற்ற கொளத்தூர் விநாயகர் சிலை
Published on

சென்னை,

முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான், ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி தினத்தில் அவதரித்தார். இந்த நாள் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று (14.9.2026) விநாயகர் சதுர்த்தி விழா, நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில்களில் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இதனால் கோவில்களில் இன்று கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. வீடுகளில் விநாயகர் வழிபாடு மேற்கொள்ளும் மக்கள், விநாயகர் சிலைகளை வைத்து அலங்கரித்து, கொழுக்கட்டை, மோதகம், லட்டு, அப்பம், அவல், பொரி, கடலை, சுண்டல் போன்ற நைவேத்யங்களை படைத்து பூஜை செய்கின்றனர்.

இதேபோல் கோவில்கள் சார்பிலும், பல்வேறு இந்து அமைப்புகள் சார்பிலும் பொது இடங்களில் பிரமாண்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. தலைநகர் சென்னையில் மட்டும் 1,562 சிலைகளை வைத்து வழிபட காவல்துறை அனுமதி வழங்கியிருக்கிறது.

அந்த வகையில் சென்னை கொளத்தூரில் 2,900 கண் திருஷ்டி கணபதி யந்திரங்கள் மற்றும் 2,800 கண் திருஷ்டி சூரிய சக்கரங்களால் விநாயகர் சிலை அலங்கரிக்கப்பட்டுள்ளது. 42 அடி உயரம் கொண்ட இந்த பிரம்மாண்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதை தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com