ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது

ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது
Published on

தென்காசி மாவட்டம் சின்ன கோவிலான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெனடிக் தலைமையில் போலீசார் நேற்று வேப்பங்குளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் 39 மூட்டைகளில் தலா 50 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக நெல்லை குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கீழக்கலங்கல் கிராமத்தை சேர்ந்த டிரைவர் அஜித் (வயது 19), சங்கரன்கோவில் நடுவக்குறிச்சி ராமராஜ் (52) மற்றும் பூல்பாண்டியன் (38) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரேஷன் அரிசி மற்றும் மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com